/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏலத்தில் தேங்காய் விலை தொடர் சரிவு
/
ஏலத்தில் தேங்காய் விலை தொடர் சரிவு
ADDED : டிச 26, 2025 05:17 AM
அன்னூர்: அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாராந்திர வேளாண் விளைபொருட்கள் ஏல விற்பனை நடந்தது. இதில், 28 ஆயிரத்து 560 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன.
ஒரு கிலோ 45 ரூபாய் 60 பைசா முதல், 60 ரூபாய் 99 பைசா வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ஆறு ரூபாய் குறைந்துள்ளது.
தேங்காய் கொப்பரை, 74 மூட்டைகள் வுந்தன. ஒரு கிலோ 110 ரூபாய் முதல் 222 ரூபாய் வரை விற்பனையானது.
தேங்காய் தொட்டி ஒரு கிலோ 29 ரூபாய் 90 பைசாவுக்கு விற்பனையானது. மொத்தம் 10 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள்விற்பனையானது.
ஏலத்தில், 84 விவசாயிகளும், 16 வியாபாரிகளும் பங்கேற்றனர். கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் இத்தகவலை தெரிவித்தார்.

