/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை; பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
/
வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை; பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை; பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை; பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 08, 2025 11:11 PM
ஆனைமலை; ஆனைமலை அருகே குப்புச்சிபுதுாரில், தமிழகத்தின் ஒரே ராகு கேது பரிகார சன்னதியாக, ஸ்ரீதேவி பூதேவி சமேத மச்சாவதாரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்றும், நாளையும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, இன்று காலை, 4:30 மணிக்கு சுப்ரபாதம், மாலை, 4:00 மணிக்கு திருமஞ்சன சேவை, மாலை 5:00 மணிக்க சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை, 6:30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதேபோல, நாளை, காலை, 4:30 மணிக்கு சுப்ரபாதம், 5:00 மணிக்கு பரமபத வாசல் பூஜை, 5:30 மணிக்கு பரமபத வாசல் நடைதிறப்பு, 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:30 மணிக்கு மகா தீபாராதனை, காலை 7:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.