/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரமணிய சுவாமிக்கு வைரவேல்; பழநி பாதயாத்திரை குழு ஏற்பாடு
/
சுப்ரமணிய சுவாமிக்கு வைரவேல்; பழநி பாதயாத்திரை குழு ஏற்பாடு
சுப்ரமணிய சுவாமிக்கு வைரவேல்; பழநி பாதயாத்திரை குழு ஏற்பாடு
சுப்ரமணிய சுவாமிக்கு வைரவேல்; பழநி பாதயாத்திரை குழு ஏற்பாடு
ADDED : ஜூலை 04, 2025 10:17 PM
வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமிக்கு, 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைரவேல் வழங்க பழநி பாதயாத்திரை காவடிக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆண்டு தோறும், பங்குனி உத்திரத்திருவிழா, தைபூசம், சூரசம்ஹார விழா, முருகபக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாள் தோறும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின், 50ம் ஆண்டையொட்டி முருகபக்தர்கள் சார்பில், முருகப்பெருமானுக்கு 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மூன்றேகால் அடி உயரமுள்ள வைரவேல் செய்து, கோவிலுக்கு அர்பணிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடக்கிறது.குழு சார்பில் மேலும், பல்வேறு அன்மிக பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இரண்டாம் கட்ட ஆலோசனைக்கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், ஏற்கனவே முடிவு செய்த படி, சுப்ரமணிய சுவாமிக்கு வைரவேல் உபயம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், பழநி பாதயாத்திரை காவடிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அழகுராஜ், அசோக், செந்தில்முருகன், ஜெகன்னாதன், கண்ணன், ரமேஷ், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.