/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளலார் 202வது அவதார தின விழா கொண்டாட்டம்
/
வள்ளலார் 202வது அவதார தின விழா கொண்டாட்டம்
ADDED : அக் 08, 2024 12:13 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சன்மார்க்க சங்கத்தில், வள்ளலாரின் அவதார தின விழா நடந்தது.
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் மற்றும் ஜோதிநகர் சன்மார்க்க சங்கம் சார்பில், வள்ளலாரின், 202வது அவதார தின ஆண்டு விழா, காந்தி மண்டபம் சன்மார்க்க சங்கத்தில் நடந்தது.
விழாவையொட்டி, காலை, 6:30 மணிக்கு அகவல் பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு கொடியேற்றுதலுடன் விழா துவங்கியது. சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின், அன்னதானம் வழங்கப்பட்டது. சன்மார்க்க சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* ஆனைமலை, மகாத்மா காந்தி ஆசிரமத்தில் வள்ளலார் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஆசிரமக் குழந்தைகளால் திருவருட்பா பாடல்கள், திருவருட்பா அகவல் பாராயணம் பாடப்பெற்று, ஜோதி வழிபாடு நடந்தது.
முன்னதாக, வள்ளலார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன், 'வள்ளலார் காட்டிய அன்பு நெறியும் அமைதி வாழ்வும்' என்ற தலைப்பில் பேசினார்.
அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் காட்ட வேண்டும்; அனைத்து உயிர்களுக்கும் பசியைப் போக்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.