/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளி கும்மி நடனம்; 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
/
வள்ளி கும்மி நடனம்; 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
வள்ளி கும்மி நடனம்; 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
வள்ளி கும்மி நடனம்; 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 14, 2025 10:58 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே நடந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில், 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகையன் வள்ளிக்கும்மி ஆசிரியர்.
இவர் வள்ளிக்கும்மி கலையை கற்று, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அவருக்கு பொன்விழா நடைபெற்றது. இவரிடம் பயிற்சி பெற்ற குழுவினர் ஒன்றிணைந்து ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்தினர்.
மேட்டுப்பாளையம் - அன்னூர் நால் ரோட்டில் உள்ள, வேலன் மஹால் வளாகத்தில் வள்ளிக் கும்மி நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், 36க்கு மேற்பட்ட வள்ளிக் கும்மி குழுவை சேர்ந்த, சிறுவர், சிறுமியர், ஆண்கள் பெண்கள் என, 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். குமரன் குன்று முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் குமார் வரவேற்றார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி உள்பட பலர் பேசினர்.
ஆசிரியர் முருகையன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பாடல்களுக்கு ஆண்கள், பெண்கள் சிறுவர், சிறுமியர் கும்மி ஆடினர்.

