ADDED : ஜன 16, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை சுந்தராபுரம், கஸ்தூரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், நாளை 17ம் தேதி மாலை 6 மணிக்கு 'வள்ளி கும்மி' நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கஞ்சிக்கோணம்பாளையம் இளங்காளைகள் கிராமியக் கலைக்குழுவினர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, 18ம் தேதி மாலை 4 மணி முதல் கணபதி ஹோமம், மகா பூர்ணா ஹுதி மற்றும் திருவாதிரை நடனம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.
