ADDED : ஏப் 21, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : ஸ்ரீ கருப்பன் வள்ளி கும்மி கலைக்குழுவின் அரங்கேற்ற விழா நடந்தது.
ஸ்ரீ கருப்பன் வள்ளி கும்மி கலைக்குழுவின் சார்பில், பி.எல்.எஸ்., நகர் குழுவின் அரங்கேற்ற விழா சித்தி விநாயகர் கோவில் மைதானத்தில் நடந்தது.
ஸ்ரீ கருப்பன் வள்ளி கும்மி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் கோபி தலைமையில் நடந்த விழாவில், இசைக்கலைஞர் செல்வம் குழுவினர் பம்பை இசைக்க, சிறுமியர் முதல் மூத்த ஆட்டக்கலைஞர்கள் வரை உற்சாகத்தோடு பாடல்கள்களுக்கு ஆடி தங்கள்திறமையை வெளிப்படுத்தினர்.
மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விழாவில், ஏராளமான பார்வை யாளர்கள் கரகோஷம் எழுப்பி, ரசித்தனர். முன்னதாக விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய கலைஞர்கள், முளைப்பாரி எடுத்து வந்தனர்.
பயிற்சி ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

