/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரமணியர் திருக்கல்யாணத்தில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
/
சுப்ரமணியர் திருக்கல்யாணத்தில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
சுப்ரமணியர் திருக்கல்யாணத்தில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
சுப்ரமணியர் திருக்கல்யாணத்தில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
ADDED : அக் 13, 2024 10:33 PM

போத்தனூர் : கோவை, கஞ்சிக்கோனாம்பாளையத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது.
விழாவில், வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது; செலக்கரிசல் ஒயில் கும்மி ஆசிரியர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார்.
வள்ளியைத் திருமணம் செய்வதற்காக வளையல் செட்டியார், வேட்டுவர் என, முருகர் பல அவதாரங்கள் எடுப்பார். முடிவில் பழநியில் திருமணம் செய்வார். இந்நிகழ்வை முருக பக்தர்கள், வள்ளி கும்மி என்ற பெயரில் நிகழ்த்துக் கலையாக ஆடி வருகின்றனர். கஞ்சிக்கோனாம்பாளையத்தில், வள்ளி கும்மியை இளங்காளைகள் கிராமிய கலை குழுவினர் நிகழ்த்தினர். பெண்கள், ஆண்கள் என, 400 பேர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வள்ளி, முருகர் திருமண நிகழ்வு, நாடகமாக அரங்கேற்றப்பட்டது. பாடகர் முருகன், ஒயில்கும்மி விஜயன், ஒயிலாட்டம் கோவிந்தராஜ், பாலசுப்ரமணியம், சிலம்பாட்டம் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். குழல் ஆயர் பீடத்தின் நாராயண ராமானுஜ ஜெகனாத ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கினார்.
முன்னதாக திருக்கல்யாணத்திற்கு பழநி ஆண்டவர் கோவிலிலிருந்து பெண் வீட்டார்; பாமா ருக்மணி சமேத கிருஷ்ணசாமி கோவிலிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் சீர் வரிசைகள் எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை, குரு வழிபாடு மற்றும் ஆசிரியர்கள் கவுரவித்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.