/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளி சுனை, முருகர் பாதம்... கோவிலின் தனிச்சிறப்பு
/
வள்ளி சுனை, முருகர் பாதம்... கோவிலின் தனிச்சிறப்பு
வள்ளி சுனை, முருகர் பாதம்... கோவிலின் தனிச்சிறப்பு
வள்ளி சுனை, முருகர் பாதம்... கோவிலின் தனிச்சிறப்பு
ADDED : ஏப் 10, 2025 09:50 PM

பொன்மலை கோவிலில், வேலாயுத சுவாமியை தரிக்க அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகளில் ஏறி செல்லும் போது, முதலில் இடும்பர் சன்னதியும், அடுத்ததாக கணபதி சன்னதியும் அமைந்துள்ளது.
இடும்பரையும், விநாயக பெருமானையும் வழிபட்டு படியேறி சென்றால், மலை மீது மூலவரான பாலமுருகர் காட்சியளிக்கிறார். எந்த ஸ்தலத்திலும் இல்லாத சிறப்பாக பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், மூலவருக்கு குடுமி உள்ளது. உற்சவ மூர்த்தியாக, வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.
காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட காசி விஸ்வநாதர், விசாலாட்சி தாயார், கன்னி மூல கணபதி, கன்னிமார் கருப்பராயன் என, தனித்தனி சன்னதியில் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
கோவில் முன் மண்டபத்தில், கம்பீர தோற்றத்தில் கொடிமரமும், மயிலும் உள்ளது. கோவிலின் ஈசானி பகுதியில் தல தீர்த்தமான வள்ளி சுனை உள்ளது. இதில், வற்றாத அளவில் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படுவது கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.
கோவிலில், சுவாமிக்கு பள்ளி அறை உள்ளது. மற்றும் இங்கு மடப்பள்ளியும் உள்ளது. பின் பகுதியில் முருகர் காட்சியளித்ததற்கு சாட்சியாக 'முருகர் பாதம்' உள்ளது.
மூலவர் சன்னதியின் பின்பகுதியில் வெளிப்புறத்தில் இரண்டு பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. இதில், ஒன்று நந்தா தீபம் பற்றிய தகவல்களும், மற்றொன்று நெல் தானம் குறித்த தகவல்களும் இடைபெற்றுள்ளன. தற்போது இந்த கல்வெட்டுகள் மறைந்துள்ளது. கோவில் அடிவாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நந்தவனம் இருந்தது.
பக்தர்கள் படி ஏறி செல்ல முன் பாதையும், வயதான பக்தர்கள் வாகனங்களில் சென்று சுவாமி தரிசனம் செய்ய பின் பகுதியில் மலைப்பாதையும் உள்ளது.

