/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளிக்கும்மி ஆட்டம்; உலக சாதனை நிகழ்ச்சி
/
வள்ளிக்கும்மி ஆட்டம்; உலக சாதனை நிகழ்ச்சி
ADDED : அக் 01, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை : ஆனைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திரவுபதி அம்மன் மற்றும் கோலாட்ட கலை குழுவினரின், உலக சாதனை நிகழ்ச்சியாக, வள்ளிக்கும்மி ஆட்டம் நடந்தது.
மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கலைஞர்கள், 6 குழுக்களாகக பிரிந்து, ஒரு குழுவுக்கு, ஒரு மணி நேரம், ஒரு நிமிடம், ஒரு வினாடி என, வள்ளிக்கும்மி நடனம் ஆடினர். தொடர்ச்சியாக, ஆறு மணி நேரம், ஆறு நிமிடம், ஆறு வினாடி நடனம் ஆடி, உலக சாதனை படைத்தனர். குழுவினருக்கு கேடயம் வழங்கப்பட்டது.