ADDED : மார் 17, 2025 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கப்பளாங்கரை முருகன் கோவிலில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு, கப்பளாங்கரை முருகன் கோவில் வளாகத்தில், தாள சங்கமம் கிராமிய கலைக்குழு சார்பில், 56வது வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
இதில், சுவாமி தரிசனத்துடன் காவடி ஆட்டம், ஜமாப் மேளம் நடந்தது. தொடர்ந்து வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது. இதில், கப்பளாங்கரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த மக்கள் பலர் பங்கேற்று நடனமாடினார்கள்.