/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளிக்கும்மி அரங்கேற்றம்; 400 கலைஞர்கள் பங்கேற்பு
/
வள்ளிக்கும்மி அரங்கேற்றம்; 400 கலைஞர்கள் பங்கேற்பு
வள்ளிக்கும்மி அரங்கேற்றம்; 400 கலைஞர்கள் பங்கேற்பு
வள்ளிக்கும்மி அரங்கேற்றம்; 400 கலைஞர்கள் பங்கேற்பு
ADDED : அக் 21, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதுாரில் வள்ளிக்கும்மி அரங்கேற்றம் நடந்தது.
கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதுாரிலுள்ள தனியார் இடத்தில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி வாத்தியார் சிவகுமார் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு பேரூராட்சித்தலைவர் கதிர்வேல் கலந்து கொண்டார். இதில், விநாயகர் மற்றும் மாரியம்மன் வழிபாடு நடத்தப்பட்டது.
மரக்கன்று நடுதல் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து வள்ளிக்கும்மி அரங்கேற்றம் நடந்தது. இதில், 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.