/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கலைப்போட்டிக்கு வால்பாறை மாணவி தேர்வு
/
மாநில கலைப்போட்டிக்கு வால்பாறை மாணவி தேர்வு
ADDED : நவ 13, 2025 08:38 PM

வால்பாறை: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், மாணவ, மாணவியரின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில், கலைத்திருவிழா, பள்ளி, குறுவள மையம், வட்டாரம், மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தன.
வால்பாறை ஒன்றியத்தில் நடந்த கலைத்திருவிழாவில், 68 பள்ளிகளை சேர்ந்த, 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், வால்பாறை அரசு உதவி பெறும் துாய இருதய ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி தர்ஷிகா, வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாநில அளவில் விளையாடவுள்ள மாணவி தர்ஷிகாவை, பள்ளியின் தாளாளர் ரெஜினாமேரி, தலைமை ஆசிரியர் அன்பரசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் கூறுகையில், ''வால்பாறையில் நடந்த கலைத்திருவிழா போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏழு மாணவியர் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தர்ஷிகா மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இவர் வரும், 25ம் தேதி கரூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார்,'' என்றார்.

