/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிப்பு கூட்டப்படும் சிறுதானியம்; வேளாண் அதிகாரி அறிவுரை
/
மதிப்பு கூட்டப்படும் சிறுதானியம்; வேளாண் அதிகாரி அறிவுரை
மதிப்பு கூட்டப்படும் சிறுதானியம்; வேளாண் அதிகாரி அறிவுரை
மதிப்பு கூட்டப்படும் சிறுதானியம்; வேளாண் அதிகாரி அறிவுரை
ADDED : செப் 11, 2025 09:25 PM
- - நமது நிருபர் -
சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது.
சிறுதானியங்களை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த வழிவகை ஏற்படுத்தும் நோக்கில், பதப்படுத்தும் இயந்திரங்கள் வாங்க, வங்கிகள் வாயிலாக, 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெறவும், அதற்கான பின்னேற்பு மானியமாக, 18.75 லட்சம் ரூபாய் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில் முனைவோர், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி பயனாளிகள் ஆகியோர், இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அவிநாசி, புஞ்சை தாமரைக்குளம் மற்றும் நடுவச்சேரி கிராமங்களைச் சேர்ந்த இரு பயனாளிகள்; வெள்ளகோவில், முத்துார் கிராமத்தைச் சேர்ந்த பயனாளிகள் அமைத்துள்ள சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையங்களை வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) வெங்கடாச்சலம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனையையும் வழங்கினார்.