ADDED : ஏப் 26, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், காளான், முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏப்ரல் 28 , ஏப்ரல் 29 காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
முருங்கையில் இருந்து முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடைமிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் தயாரிக்கவும், காளானில் இருந்து காளானில் இருந்து காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிழிதல் தொழில்நுட்பங்களும் கற்பிக்கப்படும்.
கட்டணம் ரூ. 1,770. அதிகபட்சம் 30 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை. தொடர்புக்கு : 94885 18268.
