/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரம்பரிய நெல் வகைகளில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி
/
பாரம்பரிய நெல் வகைகளில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி
பாரம்பரிய நெல் வகைகளில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி
பாரம்பரிய நெல் வகைகளில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி
ADDED : ஆக 27, 2025 10:40 PM
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் கால நிலை ஆய்வு மையம், பயிர் மேலாண்மை இயக்ககம் சார்பில், பாரம்பரிய நெல் வகைகளில் மதிப்புக் கூட்டுதல் தொடர்பான பயிற்சி நடந்தது.
'கிரான்ட் சேலஞ்ச் கனடா' நிறுவன நிதியுதவியுடன், நடந்த ஒரு நாள் பயிற்சி முகாமுக்கு, பயிர் மேலாண்மை இயக்குனர் செந்தில் தலைமை வகித்தார்.
பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்து, அவற்றின் மதிப்புக் கூட்டிய உணவுப் பொருட்களை தயாரித்தல், அவற்றின் வாயிலாக சத்துணவு மேம்பாடு, வாழ்வியல் நோய்களைத் தவிர்த்தல், உணவுப் பாதுகாப்பு, சந்தைப்படுத்தல் யுக்தி குறித்து விளக்கப்பட்டது.
வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி, உதவி பேராசிரியர் கோகிலாவாணி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய தலைவர் கார்த்திகேயன், ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டை செயலர் சரஸ்வதி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள், 5 சுய உதவிக்குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.