/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெட்ரோல் பங்க்கில் வேன் எரிந்து நாசம்
/
பெட்ரோல் பங்க்கில் வேன் எரிந்து நாசம்
ADDED : ஜூலை 29, 2025 05:06 AM

போத்தனுார்:
கோவை, சுந்தராபுரம் லோகநாதபுரத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். நேற்று இரவு இவர் தனது மாருதி ஆம்னி வேனிற்கு பெட்ரோல் நிரப்ப, குறிச்சியிலுள்ள பெட்ரோல் பங்க்கிற்கு நண்பர்களுடன் சென்றார். சுரேந்தர் என்பவர் வேனை ஓட்டினார்.
பெட்ரோல் நிரப்பிய பின் சுரேந்தர் வாகனத்தை ஸ்டார்ட் செய்துள்ளார். டிரைவர் சீட்டின் அடியில் தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த அனைவரும் கீழே இறங்கி வேனை பங்க்கின் ஒரு ஓரத்திற்கு தள்ளிச் சென்று நிறுத்தினர். தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க முயன்றனர்.
தகவலின்பேரில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை முற்றிலும் அணைத்தனர். இருப்பினும் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. போத்தனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.