/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தில் பாலியல் தொல்லை அதிகரிப்பு: வானதி சீனிவாசன் புகார்
/
தமிழகத்தில் பாலியல் தொல்லை அதிகரிப்பு: வானதி சீனிவாசன் புகார்
தமிழகத்தில் பாலியல் தொல்லை அதிகரிப்பு: வானதி சீனிவாசன் புகார்
தமிழகத்தில் பாலியல் தொல்லை அதிகரிப்பு: வானதி சீனிவாசன் புகார்
ADDED : ஆக 25, 2025 09:42 PM

பெ.நா.பாளையம்; தமிழகத்தில் மாணவியர்கள் மீதான பாலியல் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.
கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் கைத்தறி தினத்தை ஒட்டி கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியையொட்டி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நிருபர்களிடம் பேசுகையில், 'பிரதமர் மோடியின் கனவை நினைவாக்கும் வகையில் இவ்விழாவில் திரளான மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். '
ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள்' என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உ.பி.,யில் அத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும்.
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை தி.மு.க.,வினர் ஆதரிக்க வேண்டும். தமிழ், தமிழர்களை ஆதரிப்போம் என்று பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க., தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அவருக்கே தங்களுடைய ஆதரவை தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் மாணவியர் பாலியல் தொல்லைக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஹிந்து தர்மம் அழியாத தர்மம் அதை யாராலும் அழித்துவிட முடியாது. மனிதன் தன்னுடைய வாழ்க்கையை பூரணமாக வாழ்வதற்கு சனாதன தர்மம் உதவுகிறது. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி செயல்பாடுகள் குறித்து, அந்தந்த கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.