/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விமான நிலையத்தில் வந்தே மாதரம் பாடல் நிகழ்ச்சி
/
கோவை விமான நிலையத்தில் வந்தே மாதரம் பாடல் நிகழ்ச்சி
கோவை விமான நிலையத்தில் வந்தே மாதரம் பாடல் நிகழ்ச்சி
கோவை விமான நிலையத்தில் வந்தே மாதரம் பாடல் நிகழ்ச்சி
ADDED : நவ 08, 2025 01:03 AM
கோவை: கோவை விமான நிலையத்தில், 'வந்தே மாதரம்' பாடல் கொண்டாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வந்தே மாதரம் தேசிய பா டல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் ஓராண்டுக்கு இந்தப் பாடல் பாடப்படுகிறது. தேசிய கீதத்துக்கு இணையாக , சுதந்திரப் போராட்டத்தின் போது பாடப்பட்ட 'வந்தே மாதரம், பாடலைகொண் டாடும் விதமாக நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. ஓராண்டுகள் நடக்கும் இந்த நிகழ்வு, நேற்று முதல் துவங்கியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் பணியாற்றுவோர், தனியார் விமான சேவையில் உள்ளோர், வணிக, சரக்கு போக்குவரத்து பிரிவினர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார் தலைமையில், நிகழ்ச்சி நடந்தது. பங்கேற்ற 150 க்கும் மேற்பட்டோர் இணைந்து, வந்தே மாதரம் பாடலை பாடினர்.
விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார் பேசுகையில், நாட்டின் பழம் பெருமை மிக்க வரலாறு, தேசப்பற்று, ஒற்றுமையின் வலிமையை குறிக்கும் விதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது. இளைய தலைமுறையினருக் கு இதை எடுத்துச் சொல்லவும், தேசத்தின் அருமையை உணர்த்தவும்இந்த பாடல் இயற்றிய 150வது ஆண்டு கொண்டாடப்படுகிறது,'' என்றார்.

