/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 27, 2025 10:41 PM

அன்னுார்; சின்ன வடவள்ளியில் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
குமரன்குன்று அருகே உள்ள சின்ன வடவள்ளியில், பழமையான பூமாதேவி, நீளாதேவி, சமேத, வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில், சிற்ப சாஸ்திர முறைப்படி கர்ப்ப கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் கட்டப்பட்டது. இத்துடன் தும்பிக்கை ஆழ்வார், விஷ்ணு பகவான், லட்சுமி நரசிம்மர், உள்ளிட்ட சன்னதிகளும், பரமபத வாசல், கருவறை, விமானம், கோபுரம் ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி பட்டம் கட்டுதலுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காலை 10:05 மணிக்கு கோபுரம், விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தயானந்தபுரி மகா சாமிகள் அருளுரை வழங்கினார். சிறுமுகை ஸ்ரீராம கானா சபாவின் பக்தி பஜனையும், இசை நிகழ்ச்சியும் நடந்தது.
மதியம் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.