/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்வேறு அமைப்புகள் அம்பேத்கருக்கு அஞ்சலி
/
பல்வேறு அமைப்புகள் அம்பேத்கருக்கு அஞ்சலி
ADDED : டிச 07, 2025 07:35 AM
அன்னூர்: ஜோதிராவ் பூலே கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு சங்கம் சார்பில், அன்னூரில் அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம் நடந்தது. மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் குமார் தலைமை வகித்தார்.
அம்பேத்கரின் சாதனைகள் குறித்து கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. மைய தலைவர் இளங்கோவன், பொருளாளர் புஷ்பராஜ், பொறுப்பாளர் சதீஷ்குமார், மாலை நேர கல்வி மைய தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
* விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அன்னூரில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். அவிநாசி தொகுதி செயலாளர் பொன் துரைசாமி, ஒன்றிய செயலாளர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

