/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகாலட்சுமி அம்மன் கோவிலில் வருஷாபிேஷக விழா
/
மகாலட்சுமி அம்மன் கோவிலில் வருஷாபிேஷக விழா
ADDED : ஆக 31, 2025 11:33 PM
கோவை; குனியமுத்துார், இடையர்பாளையம் மகாலட்சுமி அம்மன் கோவில், வருஷாபிேஷக விழா வரும் 4 முதல் 6ம் தேதி வரை நடக்கிறது.
விழா வரும் 4ம் தேதி காலை, 5:30 மணிக்கு மகா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு அன்னதானமும், மாலை 4.30 மணிக்கு, சுகுணாபுரம் அருவி ஒயிலாட்டக் கலைக்குழுவினரின் ஒயிலாட்டமும், 5.30 மணிக்கு, விநாயகர், மத்ருகா, மண்டப தேவதா பூஜையும் நடக்கின்றன.
வரும் 5ம் தேதி காலை 5.30 மணிக்கு, கணபதி பூஜை, சண்டி ேஹாமம், கன்னிகா பூஜை, மகாலட்சுமி அம்மனுக்கு, 16 வகையான அபிேஷகம், விசேஷ பூஜை நடக்கிறது. மதியம், 1 மணிக்கு, அன்னதானமும், மாலை 6 மணிக்கு, திருவிளக்கு வழிபாடும், இரவு 7 மணிக்கு இசை நிகழ்ச்சியும் நடக்கின்றன.
வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு, அம்மனுக்கு குறியாட்டுப்பால் ஊற்றுதலும், மதியம் 12 மணிக்கு, அலங்கார பூஜையும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு, தீத்திபாளையம் மகா சக்தி மாரியம்மன் மகளிர் ஒயிலாட்டக்குழுவினரின் ஒயிலாட்டமும், இரவு 7 மணிக்கு, அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.