ADDED : ஏப் 03, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கோவையில், நாளை (5ம் தேதி) ஜி.கே. வாசன் தலைமையில், கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மண்டல வாரியாக, ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய, கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நாளை (5ம் தேதி) மாலை 3:00 மணிக்கு, கோவை நவ இந்தியா அருகில், ஸ்ரீ அக்ஷயம் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், வட்டார, நகர, பேரரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஜி.கே. வாசன் பேசுகிறார்.

