/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலகாலேஸ்வரர் கோவிலில் வசந்த மண்டப பணி 'விறுவிறு'
/
காலகாலேஸ்வரர் கோவிலில் வசந்த மண்டப பணி 'விறுவிறு'
ADDED : ஜூன் 29, 2025 11:37 PM
கோவில்பாளையம்; பழமையான காலகாலேஸ்வரர் கோவிலில், வசந்த மண்டப திருப்பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையத்தில், 1,200 ஆண்டுகள் பழமையான காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. கொங்கு மண்டலத்தின் திருக்கடையூர் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்குள்ள குரு பகவான் தட்சிணாமூர்த்தி மிகப்பெரிய அளவில் உள்ளது. இக்கோவில் எட்டாம் நூற்றாண்டில், கவுசிகா நதிக்கரையில் சோழர் கால கட்டிட வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருப்பணிகள் கடந்த டிசம்பர் மாதம் துவங்கின.
தற்போது வசந்த மண்டபம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அன்னதான கூடம், மடப்பள்ளி, ராஜகோபுரம் அமைத்தல் ஆகியவை பல கோடி ரூபாய் செலவில் செய்யப்பட உள்ளன.
இதற்கு அறநிலையத்துறை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் சிரவை நாகராஜ், அறங்காவலர்கள் ரவீந்திரன், ரவிச்சந்திரன், சுமதி, சிவசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினர். 'திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.