/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டங்கிணற்று பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்
/
வட்டங்கிணற்று பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 04, 2025 12:17 AM

மேட்டுப்பாளையம்; காரமடை பஸ் ஸ்டாண்ட் அருகே வட்டங்கிணற்றுப்பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா கடந்த, 1ம் தேதி காலை முளைப்பாலிகை, தீர்த்தம் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலையில் முதற்கால வேள்வி பூஜையும், பேரொளி வழிபாடும் நடந்தது. இரவு எண்வகை மருந்து சாற்றி, கருவறையில் இறைத்திருமேனியை அமைத்தனர்.
இரண்டாம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. மலர் வழிபாடை அடுத்து, யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்றனர். விமான கலசத்திற்கும், மூலவர் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். யாக வேள்வி பூஜைகளையும், கும்பாபிஷேக விழாவையும், ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சிவதினேசு, மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவில் அர்ச்சகர் ஜோதி வேலவன் ஆகியோர் செய்து இருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

