sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாதுர் மாஸ்ய விரத மஹோத்ஸவத்தில் வேதவியாச பூஜைகள் துவங்கின

/

சாதுர் மாஸ்ய விரத மஹோத்ஸவத்தில் வேதவியாச பூஜைகள் துவங்கின

சாதுர் மாஸ்ய விரத மஹோத்ஸவத்தில் வேதவியாச பூஜைகள் துவங்கின

சாதுர் மாஸ்ய விரத மஹோத்ஸவத்தில் வேதவியாச பூஜைகள் துவங்கின


ADDED : ஜூலை 10, 2025 08:54 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 08:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பிலாஸ்பூர் ஸ்ரீ சக்ரமஹாமேருபீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் சாதுர்மாஸ்ய விரத மஹோத்ஸவம் வேதவியாச பூஜைகளை நேற்று துவக்கினார்.

ஸ்வாமிகள் நேற்று முன் தினம் ராம்நகர் கோதண்டராமர் கோவிலிற்கு விஜயம் செய்தார். பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க மலர்கள் துாவி சுவாமிகளை வரவேற்றனர்.

நேற்று ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் சாதுர்மாஸ்ய விரத மஹோத்ஸவத்தை வேதவியாச பூஜைகளுடன் நேற்று துவக்கினார்.

காலை 9:00 மணிக்கு சுக்ல யஜூர் வேத பாராயணம் நடந்தது தொடர்ந்து ஸ்வாமிகள் வேதவியாச பூஜைகளை துவக்கினார். வேதங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் வியாசர். அதனால் அவரை பிராத்தனை செய்து ஆவாஹனம் செய்து மலர்களை துாவி வழிபட்டார். வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை பாராயணம் செய்ய, சுவாமிகள். ரிஷிபரம்பரை, சனாதனம், சனத்குமாரம், சனந்தனம், கிருஷ்ணபஞ்சகம், வியாசபஞ்சகம், குருபஞ்சகம், ஐந்து குருக்கள், இந்திராதி லோகபாலகர்கள், தேவாதிதேவர்களை ஆராதனை செய்து பூஜைகளை துவக்கினார். தொடர்ந்து சாலக்கிராமங்களை எழுந்தருளுவித்து கிருஷ்ணருக்கான பூஜைகளை நிறைவேற்றினார். அப்போது பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட சகல திரவியங்களால் பூஜை நடந்தது. இதில் ராமகிருஷ்ண கனபாடிகள் உள்ளிட்ட வேதாந்திகள் பங்கேற்றனர். வேதவியாசபூஜைகளின் நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் அட்சதை வழங்கப்பட்டது.

தொடர்ந்து 60 நாட்களுக்கும் இந்த பூஜைகள் தொடரும் இன்று அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடுகளும் வேதகோஷங்களும் நடைபெறும்.






      Dinamalar
      Follow us