/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்
/
ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்
ADDED : பிப் 16, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மழை வேண்டி ஆஞ்சநேயருக்கு, 27 காய்கறிகளால் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
கோவை காரமடை அருகே உள்ள, மருதுார் ஸ்ரீஜெய மங்கள ஆஞ்சநேயர் கோவிலில், மாதம் மும்மாரி மழை பெய்து விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழித்து வளரவும் வேண்டி, ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு, 27 வகை காய்கறிகளால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த பூஜையில், ஏராளமான ஆஞ்சநேயர் பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீ ஜெய மங்கள ஆஞ்சநேயர் அருளை பெற்றனர்.