/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்து வருகிறது காய்கறி விலை
/
குறைந்து வருகிறது காய்கறி விலை
ADDED : ஜன 21, 2026 05:12 AM

தொண்டாமுத்தூர்: --: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வெளியூர் காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. விவசாயிகள் விளை பொருட்களை தொண்டாமுத்தூர், பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்கின்றனர்.
10 நாட்களுக்கு மேலாக வெளியூர் காய்கறி வரத்து அதிகரித்து வருவதால், விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த வார விலையுடன் ஒப்பிடும்போது, அனைத்து காய்கறியும் குறைந்தபட்சம் ஐந்து முதல் 30 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. வரத்து அதிகரிக்கும் என்பதால், காய்கறி விலை இன்னும் வீழ்ச்சியடையும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

