ADDED : மார் 13, 2026 05:52 AM
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பிரதானமாக பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டி மார்க்கெட்டில் கொண்டுவந்து விற்கின்றனர்.
ஒரு மாதமாகவே, வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை உயரவில்லை. இந்நிலையில், வெளியூர்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவு கொண்டுவரப்படுவதால், விலைகள் தாறுமாறாக குறைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கிலோ வெண்டைக்காய் 55 ரூபாய்க்கும், கத்தரி 50 ரூபாய்க்கும் விற்றது. வெளியூர் வரத்து அதிகரிப்பால், பூலுவபட்டி மார்க்கெட்டில் நேற்று 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி 200 ரூபாய், ஒரு கிலோ வெண்டை 35 ரூபாய், கத்தரி 30 ரூபாய் என விற்கப்படுகிறது.
வெளியூரில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறையும் வரை, விலை சரிவு நிற்காது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
