UPDATED : நவ 02, 2026 07:31 PM
ADDED : நவ 02, 2026 05:36 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், காய்கள் வரத்து குறைந்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் இன்று (நவ.,2) தக்காளி (15 கிலோ பெட்டி) - 480, தேங்காய் (ஒன்று) - -30, கத்திரிக்காய் கிலோ - 41, முள்ளங்கி --- 44, முருங்கைக்காய் --- 70, வெண்டைக்காய் --- 65, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 15, பாகற்காய் --- 65, புடலை --- 35, சுரைக்காய் --- 30, பீர்க்கங்காய் --- 65, வெள்ளரிக்காய் --- 30, அவரைக்காய் --- 120, பீட்ரூட் --- 25 மற்றும் பச்சை மிளகாய் --- 30 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று, கத்தரிக்காய் கிலோ - 6, முருங்கைக்காய் --- 35, வெண்டைக்காய் --- 15, பாகற்காய் --- 20, வெள்ளரிக்காய் --- 3, பூசணிக்காய், அரசாணிக்காய், புடலை --- 5 மற்றும் பீர்க்கங்காய், அவரைக்காய் -- 30 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
பீட்ரூட் கிலோ -- 3 மற்றும் பச்சை மிளகாய் --- 20 ரூபாய் விலை குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'நேற்று அனைத்து காய்கறிகளும், தலா, 100 கிலோ வரை வரத்து குறைவாக இருந்தது. இதே போன்று, 300 பெட்டிகள் வரை தக்காளி வரத்து குறைந்தது. வரத்து குறைந்த நிலையில் அதிகரித்துள்ளது,' என்றனர்.
