ADDED : ஏப் 06, 2026 08:26 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தால், தினசரி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) - 280, தேங்காய் (ஒன்று) --- 33, கத்திரிக்காய் கிலோ - 20 முருங்கைக்காய் --- 35, வெண்டைக்காய் --- 60, முள்ளங்கி --- 20, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 10, பாகற்காய் --- 30, புடலை --- 23, சுரைக்காய் --- 15, பீர்க்கங்காய் --- 30, வெள்ளரிக்காய் --- 20, பீட்ரூட் --- 22, அவரைக்காய் --- 70, மற்றும் பச்சை மிளகாய் --- 40 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) --- 30, தேங்காய் (ஒன்று) --- 3, முருங்கைக்காய் கிலோ --- 10, பூசணிக்காய் --- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
மேலும், வெண்டைக்காய் கிலோ --- 5, புடலை -- 2, பீட்ரூட் --- 3, வெள்ளரிக்காய் --- 7 ரூபாய் விலை குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'வெயிலின் தாக்கத்தால் காய்கறிகள் வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று மார்க்கெட்டில், ஒவ்வொரு காய்கறிகளும், 100 கிலோ வரை குறைவாக வரத்து இருந்தது. இதனால், ஒரு சில காய்கறிகள் விலை அதிகமாகவும், சில காய்கள் விலை குறைந்தும் காணப்பட்டது,' என்றனர்.
