ADDED : செப் 02, 2026 07:22 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்ததால், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை கிலோ – 80, நேந்திரன் – 65, பூவன் – - 45, ரஸ்தாளி – 45, கதளி – 50, மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் – 50 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று ரஸ்தாளி மற்றும் கதளி கிலோ 15 ரூபாய் விலை குறைந்தும், பூவன் மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் கிலோவுக்கு, 10 ரூபாய் விலை அதிகரித்தும் விற்பனையானது.
வியாபாரிகள் கூறுகையில், ‘மார்க்கெட்டுக்கு, வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. வெளி மாவட்ட வரத்தும் இல்லை. இதனால், வாழைத்தார் கொள்முதல் செய்ய வந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். வரும் நாட்களில், வாழைத்தார் வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது,’ என்றனர்.
