ADDED : ஏப் 12, 2026 05:42 AM

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கால் கப் பாலில் ஒரு ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் புளிக்கவைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு சர்க்கரை ஆகியவற்றை கலந்து வைக்கவும். மாவுடன் உருக்கிய வெண்ணெய் புளித்த பால் போன்றவை சேர்த்து தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து சப்பாத்தி மாவு போல பிசையவும். பிசைந்த மாவினை ஒன்றரை மணி நேரம் காற்று புகாமல் மூடி வைக்கவும். ஒன்றரை மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதன் மீது வெண்ணெய் அல்லது பால் தடவி மேலே வெள்ளை எள் தூவி பேக்கிங் ட்ரேயில் வைக்கவும். இதனை அரை மணி நேரம் மூடி வைக்கவும். பின்னர் 20 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
இப்போது பர்கர் பண் தயார்.(தேவைப்பட்டால் இன்னும் சிறிது நேரம் வேக விடலாம்) உருளைக்கிழங்கு கட்லேட். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். எடுத்து வைத்துள்ள சாட் மசாலா மிளகாய்த்தூள் ஆம்சூர் பவுடர் கரம் மசாலா மஞ்சள் தூள் போன்றவற்றை கடாயில் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த பட்டாணி மசித்த உருளைக்கிழங்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் உருளைக்கிழங்குடன் மல்லித்தழை சேர்த்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து, தட்டை வடிவில் தட்டி வைக்கவும். கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல தயாரித்து, ரொட்டி தூளை ஒரு தட்டில் வைக்கவும். தட்டி வைத்துள்ள உருளைக் கிழங்கினை,மாவு கலவையில் தேய்த்து, ரொட்டித் தூளில் பிரட்டி தனியே வைக்கவும். இதனை எண்ணெயில் அல்லது தோசைக்கல்லில் இருபுறமும் சுட்டு வைக்கவும்.
தயார் செய்துள்ள பண்ணை 2 வட்ட துண்டுகளாக வெட்டி அதில் தக்காளி சாஸ் அல்லது தக்காளி மிளகாய் சாஸை தடவி வைக்கவும்.அதில் வெங்காயம், வெள்ளரி காய், தக்காளி,கட்லேட் போன்றவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கவும். லெட்யூஸ் தலை மீண்டும் வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய் போன்றவற்றை அடுக்கி மீதமுள்ள பண் துண்டைக் கொண்டு மூடி வைக்கவும். இப்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் வீட்டில் செய்த பர்கர் தயார்
