ADDED : பிப் 21, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் நகரில், இரண்டாவது நாளாக நேற்றும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அன்னுாரில், காலை, மாலை போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. நேற்று, கோவை சாலையில் அச்சம்பாளையம் பிரிவு வரை 2 கி.மீ.,க்கும், சத்தி சாலையில் கோர்ட் வரை ஒன்றரை கி.மீ.,க்கும், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை என அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், 'நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றி, மேம்பாலம், புறவழிச்சாலை மற்றும் வட்டச் சாலை அமைக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்' என்றனர்.
