/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி சாலையில் வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்தல்
/
ஊட்டி சாலையில் வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்தல்
ஊட்டி சாலையில் வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்தல்
ஊட்டி சாலையில் வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்தல்
ADDED : செப் 01, 2025 10:23 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கல்லாறு அருகே சாலையோரம் மான்கள் மேய வருகின்றன. மான்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வதும், சாலையோரம் நிற்பதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது. தற்போது மழை பெய்து சாலையின் இருபுறங்களிலும் பச்சை பசெல் என காணப்படுகிறது.
இதையடுத்து கல்லாறு பகுதியில் சாலையோரம் மான்கள் மேய வருகின்றன. மான்கள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்க வாய்ப்புள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மெதுவாக வாகனங்களை இயக்க அறிவுறுத்தி வருகின்றனர்.---