/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்
/
அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்
அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்
அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஏப் 27, 2025 09:33 PM

பெ.நா.பாளையம்  : அரசின் உரிய அனுமதி யின்றி ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோவை வடக்கு தாசில்தார் தலைமையில் பெரியநாயக்கன்பாளையம் மண்டல துணை வட்டாட்சியர், பெரியநாயக்கன்பாளையம் உள் வட்ட வருவாய் ஆய்வாளர், காரமடை சரக வனவர், பிளிச்சி கிழக்கு, மேற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் ஆகியோர் தலைமையில் உரிய அனுமதி இன்றி கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் தணிக்கை நடந்தது. இதில், சுந்தரராஜ் ஓட்டி வந்த டிப்பர் லாரி வாகனத்தை தணிக்கை செய்த போது, 4 யூனிட் ஜல்லிக்கற்கள் உரிய அனுமதி இன்றி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதே போல டிரைவர் தேவராஜ் ஓட்டி வந்த டிப்பர் லாரி வாகனத்தில் பழைய அனுமதி சீட்டு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த லாரியில் பெரிய அளவிலான போல்டர்ஸ் கற்கள் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து டிரைவர் மணிகண்டன் ஓட்டி வந்த டிப்பர் லாரியை தணிக்கை செய்த போது, அதில் உரிய அனுமதி இன்றி சிறிய ரக ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. மூன்று வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர்கள் சுந்தரராஜன், 55, தேவராஜ், 54, மணிகண்டன், 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

