/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்சிக்கொடியுடன் வலம் வரும் வாகனங்கள் அட்ராசிட்டியில் ஈடுபடுவதால் பாதிப்பு
/
கட்சிக்கொடியுடன் வலம் வரும் வாகனங்கள் அட்ராசிட்டியில் ஈடுபடுவதால் பாதிப்பு
கட்சிக்கொடியுடன் வலம் வரும் வாகனங்கள் அட்ராசிட்டியில் ஈடுபடுவதால் பாதிப்பு
கட்சிக்கொடியுடன் வலம் வரும் வாகனங்கள் அட்ராசிட்டியில் ஈடுபடுவதால் பாதிப்பு
ADDED : டிச 23, 2024 04:52 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், அரசியல் கட்சியினர் பலர், தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடியை கட்டிக்கொள்வது, கட்சித்தலைவர்களின் போட்டோக்களை வைத்துக்கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரியதாக எழுதிக்கொள்வது போன்ற 'அட்ராசிட்டி'களில் ஈடுபடுகின்றனர்.
சிலரோ, எந்த பதவியும் இல்லாத நிலையில், கட்சிக்கொடியை வாகனங்களில் கட்டிக்கொண்டு, வலம் வருகின்றனர்.
மோட்டார் வாகன சட்டப்படி, இதற்கு அனுமதி இல்லையென்றாலும், அரசியல் கட்சியினரின் அடாவடித்தனம் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, நியூ ஸ்கீம் ரோட்டில், அ.ம.மு.க., கட்சிக்கொடியைத் தாங்கியவாறு நான்கு வாகனங்கள், விதிமீறி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்டும், வாகனங்களை இடமாற்றம் செய்யாமல் அவர்கள் அசட்டையாக இருந்தனர். இதனால், ஏற்கனவே, ரோட்டோரத்தில் 'பார்க்கிங்' செய்திருந்த ஓட்டுநர்கள் தங்களது, வாகனத்தை எடுக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
மக்கள் கூறியதாவது:
அரசியல் கட்சி கொடியுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதியை மதிப்பதில்லை. அத்தகைய வாகனங்களில், அதிக சத்தத்துடன் கூடிய ஹாரன் பயன்படுத்தப்படுகிறது.
நினைத்த இடத்தில், எவரையும் பொருட்படுத்தாமல் வாகனங்களை நிறுத்தி வைப்பது, போலீசார் கேள்வி எழுப்பினால் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என, அரசியல் கட்சியினரின் சேட்டை அதிகரிக்கிறது.
போக்குவரத்து போலீசார், இதுபோன்று விதிமீறலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்தால், கட்சிக்கொடியை அகற்றவும், அதிகப்பட்ச அபராதம் வசூலிக்கவும் வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.