/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி பஸ் மோதி வாகனங்கள் சேதம்
/
கல்லுாரி பஸ் மோதி வாகனங்கள் சேதம்
ADDED : அக் 29, 2025 12:39 AM
போத்தனூர்: கோவை, ஈச்சனாரி மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில், நேற்று முன்தினம் இரவு, தனியார் கல்லூரி பஸ் ஒன்று சென்றது. எதிர்பாராவிதமாக பஸ் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மாற்றுத்திறனாளியின் ஸ்கூட்டர் உட்பட மூன்று இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் பைக் ஒன்று, பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்டது. அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சிறிது நேர போராட்டத்திற்குப் பின், பைக் வெளியே எடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
போலீசார் விசாரணையில், பஸ் பிரேக் பழுதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

