/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாறுமாறாக இயக்கப்படும் வாகனங்கள்; போலீஸ் கண்காணிப்பு தேவை!
/
தாறுமாறாக இயக்கப்படும் வாகனங்கள்; போலீஸ் கண்காணிப்பு தேவை!
தாறுமாறாக இயக்கப்படும் வாகனங்கள்; போலீஸ் கண்காணிப்பு தேவை!
தாறுமாறாக இயக்கப்படும் வாகனங்கள்; போலீஸ் கண்காணிப்பு தேவை!
ADDED : அக் 07, 2024 12:34 AM

ரோட்டில் குழி
பொள்ளாச்சி புது திட்ட சாலை, நான்கு ரோடு சந்திப்பில் யூனியன் பேங்க் அருகில், குழி ஏற்பட்டு ரோடு மோசமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
- -மாணிக்கம், பொள்ளாச்சி.
ஒளிராத தெருவிளக்கு
நெகமம் தனியார் பைக் ஷோரூம் அருகே உள்ள தெருவிளக்கு கடந்த இரண்டு மாதமாக ஒளிராமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் அப்பகுதியில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். அப்பகுதி மக்கள் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம் தெருவிளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -தம்பு, நெகமம்.
வீணாகும் குடிநீர்
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், தனியார் பங்க், போலீஸ் ஸ்டேஷன் போன்ற முக்கிய பகுதிகளில் அவ்வப்போது குழாயில் கசிவு ஏற்பட்டு, அதிக அளவு குடிநீர் வீணாகி ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். ரோடு சேதமடைவதுடன், குடிநீரும் வீணாகிறது. இதை குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
-- -ரஞ்சித், கிணத்துக்கடவு.
விதிமீறும் வாகனங்கள்
வால்பாறை நகரில், பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால், ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இதை தவிர்க்க, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -கவி, வால்பாறை.
வீணாகும் குடிநீர்
பொள்ளாச்சியில், மகாலிங்கபுரத்தில் உள்ள முக்கிய ரோடுகளில், இருசக்கர வாகனங்கள் மற்றும் விலை உயர்ந்த கார்களில், இளைஞர்கள் சிலர் வேகமாக செல்கின்றனர். ரோட்டில் செல்லும் மற்ற வாகனங்களையும், நடந்து செல்வோர் பற்றி கவலைப்படாமல் தாறுமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. மகாலிங்கபுரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இதை கட்டுப்படுத்த வேண்டும்.
-- சந்தோஷ், பொள்ளாச்சி.
அதிகரிக்கும் நாய் தொல்லை
நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பலர் பொதுவெளியில் நடக்க அச்சப்படுகின்றனர். எனவே, நெகமம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
-- -ராஜ்குமார், நெகமம்.
மின்கம்பத்தை மாற்றுங்க
உடுமலை நேரு வீதியில், நடு ரோட்டில் மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. இதனால், அங்கு இருக்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ், உடுமலை.
புதர்க்காடாகும் ரிசர்வ் சைட்கள்
உடுமலை, நேருவீதி எக்ஸ்டன்சன் ரோட்டில், ரிசர்வ் சைட்கள் முறையான பராமரிப்பில்லாமல் உள்ளன. இதனால் செடிகள் புதர்க்காடாக வளர்ந்துள்ளது. விஷப்பூச்சிகள் அவ்விடத்தில் தஞ்சமடைவதுடன் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் செல்கின்றன. இதனால் அப்பகுதியினருக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது.
- மாரிமுத்து, உடுமலை.
சுகாதார சீர்கேடு
உடுமலை, பழைய அக்ரஹார வீதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. திறந்த வெளியில் வீசப்படுவதால், தெருநாய்கள் அவற்றை இழுத்து வந்து ரோடு முழுவதும் பரப்பி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
- ரஞ்சித், உடுமலை.
பள்ளமான நெடுஞ்சாலை
உடுமலை - பழநி நெடுஞ்சாலை ரோடு முறையான பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் சரியாக கவனிக்காத பட்சத்தில் வாகனங்கள் குழிக்குள் இறங்கி விபத்துக்குள்ளாகும் அளவுக்கு தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சமும் இல்லாதால் இந்த ரோட்டில் பயணம் செய்வது வாகன ஓட்டுநர்களுக்கு சவாலாகவே மாறிவிட்டது.
- பிரபாகரன், உடுமலை.
நிழற்கூரை இல்லை
உடுமலை, போடிபட்டி முருகன் கோவில் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு நிழ்கூரை வசதி இல்லை. நாள்தோறும் அந்த பஸ் ஸ்டாப்பை பள்ளிக்குழந்தைகள் உட்பட நுாற்றுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர். முதியவர்வர்கள் பஸ் வரும் நேரம் வரை அமர்ந்து காத்திருக்கவும் இடமில்லாமல் அவதிப்படுகின்றனர்.
- ரேவதி, போடிபட்டி.
பராமரிப்பு இல்லை
உடுமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சி, அடிவள்ளி பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் நிழற்கூரையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன்குமார், உடுமலை.