தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்


ADDED : ஜூன் 30, 2025 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை; வால்பாறை - சிறுகுன்றா ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வால்பாறைக்கு, தினமும் அதிகளவில் வாகனங்கள் வருகின்றன. சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக, வால்பாறை பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறுகுன்றா செல்லும் ரோட்டில் சமீபகாலமாக லாரிகள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'சுற்றுலா பயணியரின் வாகனங்கள், ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கிறது. மேலும், சிறுகுன்றா செல்லும் ரோட்டில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அந்த வழியாக பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us