/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருங்கற்களுடன் சிக்கிய வாகனங்கள்
/
கருங்கற்களுடன் சிக்கிய வாகனங்கள்
ADDED : ஜன 03, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை; ஆனைமலை அருகே, அனுமதியின்றி கருங்கற்கள் எடுத்துச் சென்ற லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து, கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர். ஆனைமலை அருகே, தளவாய்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மாசிலாமணி, தொண்டாமுத்துார் - சமத்துார் ரோட்டில் ஆய்வுக்கு சென்றார். அவ்வழியாக சென்ற லாரி மற்றும் டிராக்டரை கிராம நிர்வாக அலுவலர் சோதனை செய்ததில், அனுமதி இன்றி கற்கள் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.
அப்போது, வாகனத்தில் வந்த இருவர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து, வாகனங்களை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர், கோட்டூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

