/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடகைக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்
/
வாடகைக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஆக 10, 2025 02:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு, கோவை டாக்ஸி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சார்பில், புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
கோவை சென்ட்ரல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன் தலைமையில், நேற்று சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
இதில் புகார் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஆறு சொந்த பயன்பாட்டு வாகனங்கள், 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.1.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.