/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலம்மாள் பள்ளி ஹாக்கியில் முதலிடம்
/
வேலம்மாள் பள்ளி ஹாக்கியில் முதலிடம்
ADDED : ஆக 11, 2025 11:18 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், சி.பி.எஸ்.இ., தெற்கு மண்டலம் 1, பள்ளி மாணவ மாணவிகளுக்கான, ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின.
1 7 வயது மாணவர்களுக்கான போட்டியில், சென்னை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியும், கோவை சுகுணா பள்ளியும் மோதின. இதில் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி ஐந்து கோல்கள் அடித்து முதலிடம் பெற்றது.
காஞ்சிபுரம் வேலம்மாள் பள்ளியும், புதுக்கோட்டை வைரம்ஸ் பள்ளியும் மோதின. இதில் காஞ்சி வேலம்மாள் பள்ளி, 2 கோல் அடித்து வெற்றி பெற்றது.
திருச்சி செல்லம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியும், கோவை ஆதியானா பள்ளியும் மோதின. இதில் கோவை ஆதியானா பள்ளி, நான்கு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஜே. சரஸ்வதி வித்யாலயா பள்ளியும், காஞ்சிபுரம் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியும் மோதின. இதில் காஞ்சிபுரம் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி, 3 கோல்களை அடித்து வெற்றி பெற்றது.
14 வயது மாணவர்களுக்கான போட்டியில், கோவை சிங்காநல்லூர் எஸ்.ஜே. சரஸ்வதி வித்யாலயா பள்ளியும், நெய்வேலி ஜவகர் பள்ளியும் மோதின. இதில் நெய்வேலி ஜவஹர் பள்ளி, 3 கோல்களை அடித்து வெற்றி பெற்றது. சென்னை ஆல்வின் பள்ளியும், ஐதராபாத் பப்ளிக் பள்ளியும் மோதின. ஐதராபாத் பள்ளி வெற்றி பெற்றது.