/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கம்
/
வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : மே 08, 2025 10:31 PM
சென்னை:கோடை விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, வரும் 14, 21, 28, ஜூன் 4ம் தேதிகளில் இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 3:15 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்
வேளாங்கண்ணியில் இருந்து, வரும் 15, 22, 29, ஜூன் 5ம் தேதிகளில், மாலை 6:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11:55 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.
இந்த சிறப்பு ரயில், செங்கோட்டை, தென்காசி, சிவகாசி, விருதுநகர், மானாமதுரை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக இயக்கப்படும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

