/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானையால் தாக்கப்பட்டவருக்கு வேலுமணி ஆறுதல்
/
யானையால் தாக்கப்பட்டவருக்கு வேலுமணி ஆறுதல்
ADDED : செப் 01, 2025 07:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தொண்டாமுத்துார் அடுத்த நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டினம் பகுதிக்கு இரு நாட்களுக்கு முன் வந்த காட்டு யானை, ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்தது. வாகனங்களைத் தாக்கியது. அங்கு பூ பறித்துக் கொண்டிருந்த, 90 வயதான சந்திரகிரி என்பவரைத் தாக்கியது. இரு கால்களிலும் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை, தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வேலுமணி சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.