/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கி.ரா. விருதுக்கு வேணுகோபால் தேர்வு
/
கி.ரா. விருதுக்கு வேணுகோபால் தேர்வு
ADDED : ஆக 29, 2025 01:37 AM

கோவை; கோவை விஜயா பதிப்பகம் வாசகர் வட்டம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு, மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் கி.ரா., விருது வழங்கப்படுகிறது.இந்தாண்டுக்கான விருதுக்கு, கோவையை சேர்ந்த எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எழுத்தாளர் சு.வேணுகோபால், நுண்வெளி கிரகணங்கள், கூந்தப்பனை, வலசை, ஆட்டம், நிலம் என்னும் நல்லாள் உள்ளிட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள், கட்டுரைகள் என, 20க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார். விருது தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. விருது தொகையை சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது.
செப்., 28ல் கோவை பீளமேடு, பி.எஸ்.ஜி.. இன்ஜி., கல்லுாரியில் நடக்கும் விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்று, விருது வழங்க உள்ளார். இத்தகவலை விஜயா பதிப்பகம் நிறுவனர் வேலாயுதம் தெரித்துள்ளார்.