ADDED : மார் 07, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட பரப்பரப்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த நவ. 2ம் தேதி இரவில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவிபலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ்,30, இவரது சகோதரர் கார்த்திக்,21, மதுரை, கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை காலில் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
