/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாடித் தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி
/
மாடித் தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி
ADDED : பிப் 15, 2025 07:13 AM
கோவை; வேளாண் பல்கலையில், 'மாடித் தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் சார்பில், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க, 'நீங்களும் விவசாயி ஆகலாம் - மாடித் தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி' என்ற கருத்தரங்கம், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையத்தில் நடந்தது.
வேளாண் பல்கலை உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய இயக்குனர் செந்தில், தாவர தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் கோகிலா தேவி, பேராசிரியர் மோகன்குமார் தலைமை வகித்தனர்.
வெட்டி வேர், மண்ணரிப்பை தடுப்பதால், அத்தியாவசிய மண் ஊட்டச்சத்துக்களை தக்க வைக்க உதவுகிறது. வெட்டிவேர் சாகுபடியை, விவசாய நடைமுறைகளில் ஒருங்கிணைப்பதன் வாயிலாக, விவசாயிகள் நீண்டகால நிலைத்தன்மை, மேம்பட்ட மண் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு எதிராக அதிகரித்த பின்னடைவு ஆகியவற்றை கடந்து சாதிக்க முடியும் என, கோவை எக்கோ கிரீன் யூனிட் திட்ட இயக்குனர் பாபு கூறினார்.
வெட்டிவேர் சாகுபடியின் பல்வேறு அம்சங்கள் குறித்து, தொழில்முனைவோர் கலந்துரையாடினர். பல்கலை உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய மேலாளர் செல்வராதிகா மலர், கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.

