/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவை, திருப்பூர் வருகை டில்லி போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
/
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவை, திருப்பூர் வருகை டில்லி போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவை, திருப்பூர் வருகை டில்லி போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவை, திருப்பூர் வருகை டில்லி போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 27, 2025 12:53 AM

- நமது நிருபர் குழு -: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை கோவை மற்றும் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அக்.,28 காலை 10 மணிக்கு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை தருகிறார். அவருக்கு, மேள தாளங்கள் முழங்க, கோவில் சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்கின்றனர்.
விமானநிலையத்திலிருந்து கொடிசியா அரங்கு வரைமேடை அமைத்து, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால்குதிரை, கரகாட்டம், வள்ளிக்கும்மி, பரதநாட்டியம் உள்ளிட்ட 15 வித கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கொடிசியா அரங்கில் நடக்கும் சிட்டிசன் போரம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில், கோவையிலுள்ள முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
மதியம் 12.30 மணிக்கு டவுன்ஹால் பகுதியில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து சர்க்யூட் ஹவுஸ் சென்று மதிய உணவு உட்கொண்டு ஓய்வெடுக்கிறார்.
2:30 மணிக்கு பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெறும், சாந்தலிங்கராமசாமி அடிகளார் நுாற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
திருப்பூர் திருப்பூருக்கு நாளை மாலை வருகிறார். இங்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காந்தி சிலைகளுக்கு அவர் மாலை அணிவிக்க உள்ளார். சிலை அமைந்துள்ள பகுதிகள் மற்றும் அவரது வீடு உள்ள ஷெரீப் காலனி உள்ளிட்ட இடங்களில் டில்லியில் இருந்து வந்த சி.ஆர்.பி.எப்., மத்திய உளவு பிரிவினர், சென்னையில் இருந்து வந்த தமிழக உளவு பிரிவு போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் ராஜராஜன், எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். துணை ஜனாதிபதி வருகை காரணமாக தீவிர கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'நாளை மாலை, குமரன் சிலைக்கும், பின்னர் காந்தி சிலைக்கும் மாலை அணிவிக்கிறார். அங்கிருந்து, ஷெரீப் காலனியில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டு, பின் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு செல்கிறார். மறுநாள் காலையில், சந்திராபுரத்தில் உள்ள குல தெய்வ கோவில், வெள்ளகோவில், முத்துாரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்கிறார். மதியம், அனைத்து தரப்பினர் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பின், மதுரை புறப்பட்டு செல்ல உள்ளார்' என்றனர்.

