/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பன் கலை மன்றத்தின் வெற்றித் திருநாள் நிகழ்வு
/
கம்பன் கலை மன்றத்தின் வெற்றித் திருநாள் நிகழ்வு
ADDED : அக் 16, 2024 08:58 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில் 'வெற்றித் திருநாள்' என்ற தலைப்பிலான நிகழ்வு, லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. மன்ற ஆலோசகர் செல்வராசு, தலைமை வகித்தார். முன்னதாக, கோகுலகிருஷ்ணன் மற்றும் சஞ்சய்ராஜ் குழுவினரின் இன்னிசை, பொங்காளியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
ஆன்மிக பேச்சாளர் தனமணிவெங்கட் கலந்து கொண்டு பேசுகையில், ''நல்ல குணமுடைய குழந்தைகளிடம் இருந்து தான் சிறந்த சமுதாயம் உருவாகும். இக்குழந்தைகளின் வெற்றிக்கு காரணமாக அமைவது, வீட்டு சமையலாகும்.
''எந்த உணவை விரும்பி உட்கொள்கின்றனரோ, அதனைப் போலவே அவர்களின் மனநிலையும் அமையும்,'' என்றார்.
தொடர்ந்து, ஆன்மிக பாடகர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மன்றத்தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார், காளிமுத்து, நசீர்முகமது, குமார், கனகராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.